மெண்டிஸ் நிறுவனத்தின் வழக்கு பிற்போடப்பட்டது!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் தற்போது விளக்கமறியலில் இருக்கின்ற அர்ஜுன் எலோசியஸ் உரிமை வகிக்கும் எம். மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது. 

அந்த மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் உள்ள ஒரு நீதிபதி விலகிக் கொண்டுள்ளதால் அந்த மனுவை அடுத்த மாதம் 03ம் திகதி வரை பிற்போடுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிபதி பிரசண்ண ஜயவர்தன வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தின் பின்னர் தமது வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தை கொடுப்பதற்கு கூட முடியாத நிலை தோன்றியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார். 

இதன் காரணமாக தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் மனு எதிர்வரும் 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.