தமிழ் அரசியல் உலகம் ஒரு சாணக்கியனை இழந்துவிட்டது!

இந்துத்துவ - இந்திய லொபியின் சதுரங்க காய்களை திரைமறைவில் நகர்த்தும் சோ, சுப்ரமணியம் சுவாமி, குருமூர்த்தி வகையறாக்களின் சூழ்ச்சி, தந்திரத்திற்கு எதிர்வினையாக அல்லது அதன் விளைவாக தமிழ் அரசியல் அல்லது தமிழ் தேசம் சார்ந்து நடராசன் அந்த பாணிகளை தனதாக்கிக் கொண்டார்.

'ஜெயலலிதா கடைசி நேரத்தில் எமக்கு சார்பாக மாறினார்' என்று எழுதுவது வரலாற்று தவறு. அவர் எமக்கு சார்பாக தீர்மானங்களை எடுப்பதற்கு உந்துதலாக நடராசன் தமிழ் வாக்கு வங்கியை முன்வைத்து சாணக்கியமாக உள்ளக பேரம் பேசுதலை செய்ததன் விளைவே ஜெயலலிதாவின் மாற்றம்.

அதுவே ஜெயலிதாவுக்கு வேட்டாக மட்டுமல்ல நடராசன் குடும்பத்தினருக்கும் வேட்டாக மாறி இன்று அவர் மரணம் வரை வந்திருக்கிறது.

தமிழின அழிப்பிற்கு பிறகு களம், புலம், தமிழகம் மூன்றையும் இணைத்து நாம் உருவாக்க விரும்பிய தமிழ் வெளியுறவுக் கொள்கை மற்றும் தமிழ் லொபியின் உருவாக்கத்தில் நடராசன் தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.

உண்மையிலேயே இது எமக்கு பேரிழப்பு.

ஏனென்றால் நல்லவர்கள் - கெட்டவர்கள் என்பதற்கும் அப்பால் தமிழ் அரசியல் சூழலில் தேசம் சார்ந்து சிந்திக்கக் கூடிய சாணக்கியர்கள் தேவைப்படும் காலம் இது.

அவரை முள்ளிவாய்க்கால் முற்றத்துடன் மட்டும் சுருக்கிப் பார்ப்பது அரசியல் அறிவீனம்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.
Powered by Blogger.