முனைவர் அய்யா ம.நடராசன் அவர்களிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி!


https://youtu.be/iI4gh8Y2WdI
https://youtu.be/ba1tfDTzf4U
 முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர்,
தமிழ்தேசிய பற்றாளர் ,
ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் ,
என் நெருங்கிய நண்பர் ஐயா முனைவர் நடராசன் இயற்கை எய்தியுள்ளார்.
 தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பிய அண்ணன் முனைவர் ம. நடராசன் மறைவு வருத்தம் அளிக்கிறது. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. இந்தி எதிர்ப்புப் போராளி, தமிழ் ஈழ உணர்வாளர் ம.நடராசன் மறைவு உள்ளத்தை உலுக்குகின்றது! 1965 ல் மூண்டெழுந்த மொழிப்புரட்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராளியாகக் களத்தில் நின்ற ம.நடராசன் மறைந்த செய்தி வருத்தம் அளிக்கின்றது. தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளும், மறக்க முடியுமா? ஒருபோதும் இல்லை. சிங்களக் கொலைவெறி இராணுவம், தமிழ் ஈழத் தாயகத்தில் மாவீரர் துயிலகங்களை இடித்து அழித்ததால், மானத்தமிழர்கள் நெஞ்சம் கொந்தளித்தபோது, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பிட, தொடக்கத்தில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து, அத்தியாகிகள் கோட்டத்திற்கான நிலத்தைப் பெற்றுத் தந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாகவும், உயிர்க்காவியமாகவும் அம்முற்றம் திகழ்ந்திட அரும்பாடுபட்டவர் ம.நடராசன் அவர்கள் ஆவார். தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஓவியர் வீர சந்தனத்தை மரண வாசலில் இருந்து மீட்டு வர மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 2009 ல், தமிழ் இனப்படுகொலையைத் தடுக்க, முத்துக்குமார் உள்ளிட்ட வீரத்தியாகிகள் தீக்குளித்து மடிந்தபோது, ஒவ்வொருவரின் உடலுக்கும் மலர் அஞ்சலி செலுத்தி, அனைத்து இறுதி நிகழ்வுகளிலும் பங்கேற்றார். கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்டு உரையாற்றியது மறக்கமுடியாத ஈழத்தமிழரின் நெஞ்சங்களில் குடிகொண்ட முழக்கம் . https://youtu.be/iI4gh8Y2WdI புகை, மது போன்ற எந்தப் பழக்கமும் இல்லாத கட்டுடல் வாய்ந்த சகோதரன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தாய்த்தமிழகத்திற்கும், தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டு ஆற்றக் காத்திருந்த சகோதரனை இழந்துவிட்ட துக்கத்தில் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.