மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்!

மீள் குடியேறுவதற்கான அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என வட. மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்
.

இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவின் விசேட உப குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “மக்களுடைய வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மீற்குடியேற்றுவதற்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பொழுது வீடுகள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்ததுடன் கிணறு மற்றும் மலசலகூடம் ஆகியன இல்லாமல் வீடு கட்டுவதற்கு 8 இலட்சம் ரூபா மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிலைமையை பார்க்கும் போது இதனை அறிந்து கொள்ளலாம்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்ற காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் என்ற விடயத்தில் வடக்கு மாகாணத்தை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது. இன்னும் தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்கின்ற சூழல் நிலவி வருகின்றது.

இந்த இடங்களிலிருந்து அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் குடியேற வருகின்ற தமிழர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.