விவசாயியாக சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் விவசாயத்தில் தனக்கு ஈடுபாடு உள்ளதாக தெரிவித்துள்ளார். திரைக்கு
வந்து சில காலங்களிலே பிரபலமடைந்த நடிகராக சிவகார்த்திகேயன் காணப்பட்டு வருகின்றார். இந்நிலையில் ஆரி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், தனக்கு விவசாயத்தில் உள்ள ஈடுபாடு குறித்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது, “எனது மகள் நான்கரை வயதை கடந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வெளிநாட்டு குளிர்பானங்கள் உட்பட, பர்கர், பீட்சா போன்ற உணவு வகைகளை கொடுப்பது இல்லை. இதனால் தான் அத்தகைய விளம்பரங்களிலும் நடிப்பதுமில்லை.
மேலும், எனக்கு விவசாயத்தில் ஆர்வம் இருப்பதால், வீட்டிலே தோட்டம் செய்து வருகின்றேன். இந்நிலையில் எதிர்காலத்தில் எனக்கு பெரிய அளவில் தோட்டம் செய்யும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.