சீனா அமெரிக்காவிற்கு கொடுத்த நெற்றியடி!

அமெரிக்காவில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் விதிமாக, சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகளவில் குறைக்க வேண்டும் என்பதற்காக டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறிவைத்து அதிகளவிலான இறக்குமதி வரி விதித்தது.
இதற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்தும், வரி விதிப்பைத் திரும்பப் பெற இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்த நிலையில் தற்போது சீனா பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
உற்பத்தித் துறையில் அமெரிக்காவை விடவும் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சீனாவின் வரி விதிப்பும் அமெரிக்காவைப் பெரிய அளவில் பாதிக்கும் என டிரம்புக்கு தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இதேபோல் சீனா உடனான வர்த்தக முறிவு எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் அதிகளவிலான வரி விதிப்பைப் போலவே சீனாவும் வரியை அதிகரித்துள்ளது டொனால்டு டிரம்ப் நெற்றியடி கொடுத்துள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி கறி, மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மீது 25 சதவீத வரியும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பைப், பழங்கள், வைன் ஆகியவற்றின் மீது 15 சதவீத வரியும் விதித்துள்ளது.
இறக்குமதி வரி மூலம் ஒரு பகுதி பாதிப்பை மட்டுமே சீனா உருவாக்கியுள்ளது. மறுமுனையில் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவின் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான நெருக்கடியை உருவாக்கும் எனவும் தெரிகிறது.
சீனா அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் போரை தொடக்கியது அமெரிக்கா தான், இதன் பின்னான நாட்களில் சீனா அரசுக்கு மிக முக்கிய இலக்காக இருப்பது அமெரிக்காவின் போயிங் விமானம் தான்.
2015ஆம் ஆண்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் போயிங் தொழிற்சாலையைப் பார்வையிட்ட போது சுமார் 38 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்களை வாங்க முடிவு செய்தார்.
இந்த ஆர்டரை தற்போது ரத்துச் செய்து விட்டுப் போயிங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ்-யிடம் வாங்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆர்டர் ரத்துச் செய்து விட்டால் அமெரிக்க வர்த்தகத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
சீனா அமெரிக்காவிடம் இருந்து வருடத்திற்கு 14.6 பில்லியன் டாலர் மதிப்பிலான சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இது சீனாவின் மொத்த தானிய இறக்குமதில் 30 சதவீதம். இந்த வர்த்தகத்தைப் பிற நாடுகளுடன் கைமாற்றவும் சீனா திட்டமிட்டு வருகிறது.
உலகம் முழுவதும் டெக் சேவைகளுக்கு அமெரிக்காவை நம்பித்தான் உள்ளது, ஆனால் சீனா அப்படியில்லை, தனெக்கென ஒரு கூகிள், ஆப்பிள் எனச் சொந்த நாட்டிலேயே சிறப்பான நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இதனால் சீனா அமெரிக்காவின் சிலிக்கான் வேலியே நம்பியிருக்கத் தேவையில்லை.
இதுமட்டும் அல்லாமல் வளர்ந்து வரும் நேனோடெக்னாலஜி துறையில் அமெரிக்காவை விடவும் சீனா பல மடங்கு முன்னோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை போல், சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவன தயாரிப்பின் ஏற்றுமதிக்கு அதிக ஏற்றுமதி வரியை விதிக்கக் கடைசிக்கட்ட ஆலோசனையில் சீனா உள்ளது. இப்படிப் பல பிரச்சினைகள் வெடிக்க உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கு மத்தியிலான மொத்த வர்த்தக மதிப்பு 2017ஆம் ஆண்டில் 18.63 சதவீதம் வரையில் உயர்ந்து 84.44 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்க அரசு தற்போது சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் ஐரோப்பா சாதகமாக இயங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவிலான வரி விதிக்கப்படும் என்பதே இதன் உண்மையான மைய கருத்தாக உள்ளது.
இந்த வரிவிதிப்பால் அமெரிக்கா மட்டுமல்ல வரி விதிக்கப்படும் பிற நாடுகளிலும் இருக்கும். அமெரிக்காவைப் போல் பிற நாடுகளும் வரி விதிக்கத் தொடங்கும். இதனால் கனடா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற முக்கியமான நாடுகள் பாதிக்கப்படும்.
அமெரிக்காவின் இந்தச் செயலால் இந்நாட்டின் வர்த்தகக் கூட்டணி நாடுகள் அனைத்தையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பழிக்கு பழி என்ற கணக்கில் திட்டமிட்ட தொடங்குவார்கள். ஆகவே இதனை முட்டாள் தனமான முடிவு எனவும் வர்த்தக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.