ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குள் மீண்டும் முரண்பாடுகள்!

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குள் மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமை வடக்கிலிருந்து ஒரு முடிவெடுக்க, கிழக்கு முக்கியஸ்தர் துரைரெட்ணம் அதற்கு முரண்டுபிடித்து வருகிறார். வடக்கு நிலைமையை போல கிழக்கு நிலைமை இல்லையென்பதே இதற்காக அவர் சொல்லும் காரணம்.

உதயசூரியன் போன்ற- மக்களிற்கு பரிச்சயமான- சின்னத்தில்தான் தேர்தலில் களமிறங்க வேண்டுமென, ஈ.பி.ஆர்.எல்.எவ்- தமிழர் விடுதலை கூட்டணி சங்கமம் நடப்பதற்கு முன்னரே வலியுறுத்திக் கொண்டிருந்தார் துரைரெட்ணம். ஆனால், உதயசூரியனும் கைகொடுக்காத நிலையில், மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுடன் சில சுற்று இரகசிய பேச்சுக்களையும் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு நெருக்கடி ஏற்படும் விதமான புதிய நிலைப்பாட்டிற்கு துரைரெட்ணம் வந்துள்ளார். கிழக்கில் நன்கு அறிமுகமான தமிழ் தேசிய கூட்டமைப்பு, அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன்தான் கூட்டு வைக்கலாம், இதை தவிர கிழக்கில் வேறெந்த கட்சியுடனும் கூட்டு வைத்து வெற்றியடைய முடியாதென கட்சி தலைமைக்கு கூறியுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள சில உள்ளூர் முக்கியஸ்தர்களுடன் வவுனியாவிற்கு வந்து, சிவசக்தி ஆனந்தன் எம்.பியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

“வடக்கில் தமிழ் மக்கள் பேரவையுடன் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்தால், உங்களிற்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கலாம். ஆனால், கிழக்கில் அது வேலைக்கு ஆகாது. இதுதான் உங்கள் கூட்டணியென்றால், நாம் வேறு முடிவுதான் எடுப்போம்“ என கட்சிக்கு நேரடியாக கூறிவிட்டு கிளம்பி சென்றிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.