வவுனியாவில் முன்னாள் போராளி மரணம்!

வவுனியா- ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 20 ஆம் திகதி  யாழ் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். ஓமந்தை மாதர்பனிக்கர்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளியான 42வயதுடைய இராசையா இராசகுமாரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சைப்பலனின்றி கடந்த 20ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
Powered by Blogger.