போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜித் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு வெக்லிகட சிறைச்சாலைக் கைதிகள் சிலரைக் கொலை செய்த குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டபோது ஏற்பட்ட மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.