மியான்மர் அதிபர் ஹிதின் கியா ராஜினாமா!

மியான்மர் அதிபர் ஹிதின் கியா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனாதிபதியாக ஹிதின் கியா பதவியேற்றார். இந்நிலையில் ஹிதின் கியா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலுக்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. 71 வயதான ஹிதி கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே உடல்நிலை காரணமாகவே தற்போது அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Powered by Blogger.