வவுனியாவில் போதைப் பொருள் மாத்திரைகளின் விற்பனை தீவிரம்!

வவுனியாவில் பொதுநிலையங்களை அண்மித்த சில பகுதிகளில் போதைப் பொருள் மாத்திரைகள் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வவு­னியா ஸ்ரீரா­ம­பு­ரம், பண்டாரிக்­கு­ளம், மகா­ரம்­பைக்­கு­ளம், தோணிக்­கல், ஆகிய பகு­தி­யில் மாத்திரை யொன்று 100 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு கின்­றது.

குறிப்­பாக 14 முதல் 19வரை­யான பிள்­ளை­க­ளுக்­கும், இளம் வய­து­டைய சில ஆட்டோ சார­தி­கள் வாகன சார­தி­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­படுகின்­றது.

இந்த மாத்­தி­ரை­களை உட்­கொண்ட மாண­வர்­கள் மயக்க நிலை கல்­வி­யில் நாட்­ட­மின்மை, ஆன்மிகத்­தில் நாட்­ட­மின்மை, உண­வில் நாட்­ட­மின்மை பெற்­றோர்களுடன் முரண்­ப­டல், சக­பா­டி­க­ளு­டன் முரண்­ப­டல், அடி­த­டி­க­ளில் நாட்­டம் கொண்­டுள்­ளமை போன்ற விளை­வு­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

இத­னால் மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் பாதிக்­கப்­ப­டும் எனப் பெற்­றோர்­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர். ஏற்­க­னவே வவு­னியா குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் போதை­பொ­ருள் பாக்கு (மாவா) மாண­வர்­க­ளுக்கு விநியோகிக்­கப்­பட் டது.

பெற்­றோர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின் பிர­கா­ரம் பொலி­ஸார் அப்­ப­கு­தி­யில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­தி­யதை­ய­டுத்து போதை விநி­யோ­கம் அந்­தப் பகு­தி­யில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­பின்­னர் கடந்த இரண்டு மாதங்­க­ளாக குறித்த பகு­தி­க­ளில் போதைப்­பொ­ருள் மாத்­தி­ரை­கள் இர­க­சி­ய­மாக பிள்­ளை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படு கிறது.

இதன் விளைவு குறித்து பிள்ளை களுக்கு விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டு­மெ­ன­வும், குறித்த பகு­தி­க­ளில் பொலி­ஸார் பாது­காப்பை பலப்­ப­டுத்து வதன் மூலம் இந்­தச் செயற்­பாட்டை மட்­டுப்­ப­டுத்தி உத­வு­மாறு பாதிக்­கப்­பட்ட பெற்­றோர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.