ஐ.நாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி வரவேற்க்கதக்கது!

இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) ஆணையாளர் செயித் அல் உசைனினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை குறித் வாய்மூல அறிக்கை குறித்து ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமக்கு பெரும் ஏமாற்றங்களையே தந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எடுத்துள்ள வலிமையான மற்றும் பலமான தீர்மானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக உலகளாவிய நியாயாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.