அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது கடினமான வேலையல்ல- துரைமுருகன்!

தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்குக் கடினமான வேலையல்ல எனத் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் இரண்டு நாள் மண்டல மாநாடு ஈரோட்டில் நடந்து வருகிறது. அதில் இரண்டாவது நாளான இன்று பேசிய திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது, "தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்குக் கடினமான வேலையல்ல. ஆனால் தி.மு.க அதைக் குறுக்கு வழியில் செய்யாது" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எங்களிடம் பேசிய கருணாநிதி, அதிமுக இரண்டாக உடையும் எனக் கூறினார். ஒருவேளை அ.தி.மு.க இரண்டாக உடைந்து ஆதரவு கோரும்பட்சத்தில் அதைத் தி.மு.க புறக்கணிக்க வேண்டும் என்றும் பிறரை ஆதரித்து ஆட்சியமைத்தால் தி.மு.க-வுக்கு அழிவு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

இதேபோல் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஜெ.அணி, ஜானகி அணியினர் தன்னை வந்து அணுகியபோது அவர்களுக்குத் தான் ஆதரவு கொடுக்கவில்லை எனக் கூறிய கருணாநிதி, அழிந்துபோகும் ஒரு கட்சிக்கு நாம் உயிர் பிழைக்க வாய்ப்பு அளிக்கக்கூடாது கூடாது என்றார்." 
Powered by Blogger.