நெற்றியில் திருநீறு இடும்முன் கவனிக்க வேண்டியவை.!

இறைவழிப்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது திருநீறு. எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது. கடவுளின் அருளாய் கொடுக்கப்படும் திருநீற்றை நெற்றியில் இடும்போது நாம் கவனிக்க வேண்டியவை

🌟 கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நின்று திருநீறு இட வேண்டும்.

🌟 திருநீறு இடும்போது இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவது நல்லது.

🌟 திருநீறு என்றால் ஐஸ்வர்யம். ஐஸ்வர்யம் நம்முடன் இருக்க திருநீறு இடுவோம்.

🌟 வலது கை சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை தவிர்த்து ஏனைய விரல்கள்களால் திருநீறை நெற்றியின் இடக்கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும்.

🌟 திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்.

திருநீறு இடுவதால் உண்டாகும் பயன்கள் :

🌟 சிவனின் அருள் கிடைக்கும்.

🌟 மன அமைதி கிடைக்கும்.

🌟 திருநீறு இட்டு வெளியே செல்வதால் கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

🌟 சுத்தமான வெண் திருநீறு வாதத்தினால் உண்டாகும் நோய்களையும், பித்தத்தினால் உண்டாகும் நோய்களையும், கபத்தால் உண்டாகும் நோய்களையும் குணமாக்கும் வல்லமை உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. 
Powered by Blogger.