நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி!

கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையும் முக்கிய அம்சமாகும்.
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு தேவைப்படும் வசதிகளை வழங்குவது மத்திய வங்கியின் இலக்காகும். கடன் பெறுவதை இலகுவாக்குமாறு உரிய தரப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தியிருக்கின்றது’ என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.