க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் டிசம்பரில்!

எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. 

இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும். 

பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இதற்காக பரீட்சை பணிகளில் ஈடுப்படுத்தப்படும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களை பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுப்படுத்த கல்வி அமைச்சும், பரீட்சை திணைக்களமும் தீர்மானித்துள்ளது.
Powered by Blogger.