யாழில் இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம்!

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில், கல்லூரியின் பழைய மாணவர்களுடைய நிதி உதவியில்,
இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம் (Technology Center) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பேராயர் கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.