பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நாளை நியமனம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை அதன் தலைவர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய செயலாளரை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார். நேற்றைய தினம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியில் இருந்து ஆரியதாஸ குரே நீக்கப்பட்டிருந்ததுடன், வயது எல்லையே அவரது பதவி நீக்கத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
Powered by Blogger.