தயாரிப்பாளர்கள் சங்கம் – இயக்குனர்கள் சங்கம் இடையே மோதல்!

சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் சேரன், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது விஷாலுக்கும், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
டிஜிட்டல் பிரச்சனை காரணமாக ஸ்டிரைக் நடந்து வரும் நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்ததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Powered by Blogger.