அரசியலில் இன மற்றும் மத அடிப்படைகளை இல்லாதொழிக்க வேண்டும்!

அரசியலில் இன மற்றும் மத அடிப்படைகளை இல்லாதொழிக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்குள் இன மற்றும் மதவாத பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே சகல இனங்கள் மற்றும் மதத்தினர் நாட்டில் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.