டிக்கோயா, தரவளை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, தரவளை பகுதியில் இன்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
புளியாவத்தை பகுதியில் இருந்து டிக்கோயா பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி டிக்கோயா, சாஞ்சிமலை பிரதான வீதியில் தரவளை, பட்டல்கலை பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முச்சக்கரவண்டியில், சாரதி உட்பட 5 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவும், சாரதி மது போதையில் இருந்ததனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்துத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.