முழு நீளத் திரைப்படம் வெளியீட்டு விழா!

சத்தியயுகம் எனும் முழு நீளத் திரைப்படம் வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு த.விமலநாதனின் தலைமையில் நடைபெற்றது
ஒரு அ.ஈழவேந்தன் என்பவரே முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியும் நடித்துமுள்ளார்
தேத்தாத்தீவுக்கிராமத்தின் கலைஞன் மற்றும் ஆசிரியராகவும் இவர் இருப்பது குறிப்பிடதக்கது
இந்த திரைப்படமானது விவசாயம், விஞ்ஞானம், எதிர் காலத்தில் விவசாயத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள்போன்ற சிந்தனையைத் தூண்டக் கூடிய விதத்தில் இத்திரைப்படமானது காணப்படுகிறது
ஈழவேந்தனின் இந்த முயற்சி எதிர்கால இளைஞர் யுவதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும் எனவும் கிராமியக் கலைத்துறையில் மிளிர்கின்ற தேத்தாத்தீவு கிராமம் இன்றிலிருந்து திரைப்படத்துறையிலும் மிளிர்கின்றது என இதில் கலந்து கொண்ட பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.அமலநாதன், நிதியமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மூ.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார முன்னாள் கலாசார பீடாதிபதி க.இராஜேந்திரம், களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவ மனையின் மருத்துவ அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும், கலைஞர்கள், அரச அதிகாரிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Powered by Blogger.