சர்வமதப் பேரவையின் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் கடந்த கால வேலைத்திட்டங்களின் மதிப்பீடு தொடர்பான ஆராய்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆற்றியுள்ள இன நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் அதன் காரணமாக ஏற்பட்ட சாதக விளைவுகள் குறித்தும் இன்னமும் தீர்க்கப்படாத விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.