மகாவலி அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

இலங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமனக் கடிதத்தை கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சரத் சந்திரசிறி விதான பல்வேறு அமைச்சுக்களின் செயலாளராகவும் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.