க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு லட்சம் பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தம்ம பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தவறாது இந்தப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Powered by Blogger.