புத்தளத்தில் பதற்றம் - பொலிசார் குவிப்பு!

புத்தளத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து மேலதிக பொலிஸ் படைகள் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே பழைய நகர பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பாதுகாப்புக்காக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை குடிபோதையில் இருந்த நபரால் 77 வயதுடைய நபர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர் மாதம்பே - தனியவல்லப கிராமத்தை சேர்ந்த குருப்புஆராச்சிகே சோமபால என்பவர் மாதம்பே வைத்தியசாலை சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவத்தின் பின்னர் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.