ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை!

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை
என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ஜெ.தீபா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காமல், மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேர்மையாக விசாரணை நடத்திட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார். தனி நபரால் இந்த விசாரணையை நடத்திட முடியாது என்றும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை தனக்கு திருப்திகரமாக இல்லை என்றும் ஜெ.தீபா கூறினார். 
Powered by Blogger.