இலங்கைத் தமிழர் என்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்!


இலங்கையிலிருந்து வந்து இங்கேயே தங்கியிருக்கும் இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் உங்கள் ஆன்மிக அரசியலை எதிர்ப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, கமல் எனக்கு எதிரியே இல்லை என்று கூறியதோடு, தனது எதிரிகள் யார் என்பதையும் பட்டியலிட்டார். ஏழ்மை, லஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர் போன்றவைதான் எனது எதிரிகள் என்றார். அப்போது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தங்கியுள்ள தமிழர்கள் பற்றியும் குறிப்பிட்டார். “இலங்கையிலிருந்து எப்போதோ வந்து இங்கேயே தங்கிவிட்ட தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் தமிழர்னு சொல்றாங்க… என்ன இவங்க…,” என்றார்.
Powered by Blogger.