வடக்கு மாகாண சபைக்கு உரிய 236 வாகனங்கள் பழுது!
வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலமையில் உள்ளன. அதேவேளை ஆயிரத்து 719 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின் விதப்புரைகளுக்கு அமைவாக சேகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரித்தான வாகனங்கள் தொடர்பில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் இந்த விடயம் குறிப்பிட்பட்டுள்ளது.
அதேவேளை 9 மாகாண சபைகளுக்கும் சொந்தமாக 15 ஆயிரத்து 946 வாகனங்களில் ஆயிரத்து 592 வாகனங்கள் பயன்படுத்தப் பட முடியாத நிலமையில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை