கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம் முறை வடமராட்சியில்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் இம் முறை யாழ்ப்பானம் வடமராட்சியில் எதிர்வரும் முதலாம் திகதி செவ்வாய்கிழமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி அல்வாய் மைக்கல் விளையாட்டு மைதானத்தில் பேரணியுடனான மே தினக் கூட்டம் இடம் பெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் நெல்லியடி பொதுச்சந்தையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக மைக்கல் விளையாட்டு மைதானத்தை அடைந்நதும் பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை