இலங்கையின் புதிய வரைபடம் : 2.69 சதுர கி.மீ. அதிகரிப்பு!

கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக இலங்­கையின் வரை­ப­டத்தில் 2.69 சதுரகி­லோ­மீற்றர் அதி­க­ரித்­துள்­ள­தாக நில­அ­ள­வை­யாளர் பீ.என்.பீ.உத­ய­காந்த தெரி­வித்­துள்ளார். புதிய இலங்கை வரை­ ப­டத்­தின்­படி சிலாபம் கடற்­கரைப் பிர­தேசம் குறை­வ­டைந்­துள்­ள­தா­கவும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்­கரைப் பிர­தேசம் மாறு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். 
புதிய துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக மாறு­படும் கொழும்பு வரை­ப­டத்தை அச்­சிடும் நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் இறு­திக்குள் முடிவடையும் எனவும் அளவையாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
Powered by Blogger.