ரி56 ரக துப்பாக்கியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது!

அத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துருகிரிய  கல்வருசாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனித கொலை தொடர்பில் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த கொலையை செய்த மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 18 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் அத்துருகிரிய மற்றும் கடுவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 இதில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல மனித கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Powered by Blogger.