கிண்ணியாவில் போதையொழிப்பு செயற்றிட்டம்!

கிண்ணியாப்பிரதேசத்தில் மிக வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பாவனையை தடுக்குமுகமாக ஜம்இய்யாவின் கிண்ணியா கிளை செயற்றிட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஜம்இய்யா அலுவலகத்தில், தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி தலைமையில் இடம்பெற்றது.
அதில் கிண்ணியா பிரதேச செயலர் ஏ.எம்.அனஸ், நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் கிண்ணியா சுகாதார மருத்துவ அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்,மஸ்ஜித் நிர்வாகிகள் இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் பிரதேசம் தழுவிய போதையொழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Powered by Blogger.