நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நேரம் அறிவிப்பு!

அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்பிக்க தசநாயக்க  தெரிவித்தார்.

 ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்தநிலையில், இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி இன்றைய தினம் நாடு திரும்பியதும் இது தொடர்பிலான புதிய வர்த்தமானி வெளியிடுவார் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.