தம்மை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

தமது பதவிகளில் இருந்து தம்மை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
Powered by Blogger.