தோல்வியடைந்தபின்னர் பேசிய தோனி!

தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய்விடும் என்று தோனி தெரிவித்தார்

நேற்றையதினம் மும்பை அணியுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தபின்னர் பேசிய தோனி,என்ன தவறு நடந்தது என்பதை உணர வேண்டியது முக்கியம். இதுபோன்ற தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட வீரர்களின் திறமையை நம்பித்தான் இருக்கிறோம். தனிப்பட்ட வகையில் ஒவ்வொரும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்.

ஆனால், 10- 15 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம். மத்தியவரிசையில் மும்பை இண்டியன்ஸ் அணி, சிறப்பாக பந்துவீசியது. நீங்கள் அடிக்க வேண்டும் என்றால் பிட்சில் வேகம் வேண்டும். அவர்கள் சரியான லெந்தில் வீசியதால் பந்து சீராக துடுப்புக்கு வரவில்லை. இதனால் அடிப்பதற்கு சிரமமாக இருந்தது. அவர்களின் ஸ்பின்னர்களும் அருமையாக பந்துவீசினார்கள்.

எங்கள் பந்துவீச்சாளர்களை விட அவர்களின் பந்து தேர்வு சிறப்பாக அமைந்தது. இது சிறந்த போட்டியாக அமைந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றிக்கொண்டே இருந்தால், கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனையை இந்தப் போட்டி தந்துள்ளது என்றார்.
Powered by Blogger.