அம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை!

இந்தியா பணக்காரர்களின் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை
தக்க வைத்துள்ளவர், முகேஷ் அம்பானி. இவருடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், இவருடைய தோழி ஸ்லோகா மேத்தாவிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் நடைப்பெற்றது. 
இதில் நெருங்கிய குடும்ப நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். 
இதைதொடர்ந்து தற்போது ஆகாஷ் அம்பானியின் திருமண வேலைகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அம்பானியின் மருமகளுக்கு திருமணப் பட்டுப்புடவை சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் நெய்ய கொடுக்கப்படுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்த பட்டு புடவையில் நவரத்தின கற்கள் பாதிக்கப்பட்டு, தங்கத்தின் இழைகளாலும் காஞ்சிபுரம் பட்டு இழைகளாலும் நெய்யப்பட உள்ளதாம். இந்த புடவைக்கு ஏற்றப் போல் ஜாக்கட்டில் நவரத்தின கற்கள் மற்றும், வைர கற்கள் பதித்து மிக சிறந்த டிசைனரால் உருவாக்கப்பட உள்ளதாம். 
புடவை மற்றும் ஜாக்கட்டுக்கு மட்டும் 1 கோடிக்கும் மேல் செலவு செய்து உள்ளர்கலாம் அம்பானி குடும்பத்தினர். 
இதற்கே இப்படி என்றால் திருமண ஏற்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என பலரும் இதை பிரமிப்பாக பார்கின்றனர். 
Powered by Blogger.