தெறி பட ரீமேக்கில் கேத்ரின் தெரசா!

விஜய் நடித்த தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கேத்ரின் தெரசா நடிக்க இருக்கிறார்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தெறி’. சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸாகி மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.
தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். சமந்தா கதாபாத்திரத்துக்கு நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், எமி ஜாக்சன் கதாபாத்திரத்துக்கு நடிகை கேத்ரின் தெரசா நடிக்க இருக்கிறார்.
Powered by Blogger.