சிபிராஜ் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு!!

சத்யா படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Sibiraj
சிபிராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சத்யா’. வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ‘ரங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது சிபிராஜ்ஜின் அடுத்த படத்தின் செய்தி வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக ‘மதுபானக்கடை’ பட இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘மதுபானக்கடை’ திரைப்படம் அரசியலை நையாண்டி செய்யும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. ரபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கமலக்கண்ணன். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
Powered by Blogger.