இரண்டு குடிநீர் போத்தல் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு இல்லாது அனுமதி!

நக்கில்ஸ் மலை தொடரில் இருந்து நீரை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு குடிநீர் போத்தல் நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாது அனுமதி வழங்கியுள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
மேற்படி நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி நீரைப் பெற்றுக்கொள்வதனால், நக்கில்ஸ் மழைக்காடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால்,நக்கில்ஸ் மலைக்காடுகளின் நீரை நம்பிவாழும் தவலாந்தென்ன கிராம மக்கள்  நீர் தட்டுப்பாடால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
உலக மரிபுரிமைக் காடுகளில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்து, மேற்படி நக்கில்ஸ் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ள குறித்த இரண்டு குடிநீர் நிறுவனங்களையும் அகற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.