மலையக மக்கள் முன்னணி ரணிலுக்கு ஆதரவு!

மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (03) மாலை அலரி மாளிகையில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்று பிரேரணை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்று (03) பிரதமரை மலையக மக்கள் முன்னணி குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது, மலையகத்தின் தனித்துவமான கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு வழங்குவது என நாம் நேரடியாக தெரிவித்தோம். இதன்படி இன்று பாராளுமன்றத்தில் மலையக மக்கள் முன்னணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.