அஞ்சல் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு!

அஞ்சல் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏதாவதொரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதன் கொள்ளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த 4, 5 வார காலப்பகுதியில் கணினிக் கட்டமைப்பில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாக அஞ்சல் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

 கணினிக் கட்டமைப்பின் பணிகளை முடக்கும் வகையில் இந்த தொழில்நுட்பக் கோளாறு தாக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில், குறித்த தொழில்நுட்பக் கோளாரை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.