முயல் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் நபர் கைது!

மதவக்குளம் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரின் வீட்டை சோதனையிட்ட போது வேட்டையாடிய முயல் இறைச்சி மற்றும் அனுமதிப்பத்திரமில்லா துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று பள்ளம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவக்குளம் ஆடிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வேட்டையாடிய  முயல் இறைச்சி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அனுமதிப்பத்திரமில்லா கைத்துப்பாக்கியொன்றும் குறித்த சந்தேகநபரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 
பள்ளம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே குறித்த சந்தேகநபர் நேற்று பள்ளம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
இச்சம்பவத்தின் போது 40 வயதுடைய ஆணொருவரே இரவு 10.14 மணியளவில் பள்ளம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த நபரின் வீட்டிலிருந்து 12 ரவைகளை பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றும் 3 கிலோ முயல் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் இன்று பள்ளம பொலிஸாரால் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பள்ளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Powered by Blogger.