போராட்ட களமாக மாறிய சேப்பாக்க மைதானம்!

இன்று காலையில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னையில் நடைபெறும் போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரமே உள்ள நிலையில் மைதானத்தை சுற்றி நடைபெறும் போராட்டங்கள் மிகவும் பெரிதாக வலுத்து வருகின்றன. திருவல்லிகேணி, அண்ணாசாலை போன்ற இடங்களில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை திடீரென தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தும் இவர்கள் தொடர்ந்து மைதானத்தை நோக்கி சென்றுக்கொண்டிருகிறார்கள். இதனால் சேப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போராட்டகளமாக மாறியுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்கள் இருப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
Powered by Blogger.