ஜனாதிபதியுடன் சென்றிருந்த குழுவினர் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை!

பொதுநலவாய அமைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றிருந்த குழுவினர் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 பொதுநலவாய மாநாட்டில் கலந்கொள்வதற்காக ஜனாதிபதியுடன் சென்றவர்கள் குறித்த தகவலையும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

 இதன்படி, ஜனாதிபதியின் துணைவியார், உத்தியோகபூர்வ மருத்துவர்,அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது மனைவி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மொழிபெயர்ப்பாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மாத்திரமே இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்

 இவர்கள் தவிர்ந்த வேறு எவரும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 அத்துடன், அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் பொருளாதார மாநாட்டிலேயே கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த சுற்றுப் பயணத்தில் கலந்கொண்டிருப்பவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் எந்த செலவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லண்டன் சுற்றுப் பயணத்திற்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென ஊடக பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.