நாளை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும்!

நாட்டைச் சூழ­வுள்ள  கடற்­ப­குதிள்  நாளை 24 ஆம் திகதி வரை கொந்­த­ளிப்­புடன் காணப்­படும் எனவும், அதன் கார­ண­மாக மீன் பிடி தொழி­லுக்குச் செல்லும் மீன­வர்­களை கட­லுக்கு செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வு­றுத்தல் விடுத்­துள்­ளது. 
வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக புத்­தளம் முதல் மட்­டக்­க­ளப்பு வரை­யான கரை­யோர பிர­தே­சங்­களில் கால­நி­லையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக  நாடளா­விய ரீதியில் காணப்­படும் 8 மாவட்­டங்­களில் கடல் கொந்­த­ளிப்­புடன் காணப்­படும். கடல் அலை சுமார் 2.5 மீற்றர் தொடக்கம் 3.5 வரை உயரக் கூடும் 
புத்­தளம் தொடக்கம் நீர்கொழும்பு, கொழும்பு, களுத்­துறை, காலி, மாத்­தறை ஊடாக மட்­டக்­க­ளப்பு வரை­யி­லான கடற்­பி­ராந்­தி­யங்­களை சூழ­வுள்ள மீனவ தொழி­லா­ளர்கள் மீன்பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்டாம்.   
எனினும் ஏதேனும் அனர்த்­தங்கள் ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில் 117 என்ற அவ­சர இலக்­கத்­திற்கும், 011-3613622 என்ற இலக்­கத்­திற்கும் அழைப்­பினை ஏற்­ப­டுத்தி அனர்த்தம் தொடர்­பாக அறி­விக்க முடியும். எனவே மீன­வர்கள் மாத்­தி­ர­மின்றி கடற்­கரை பிர­தேச வாசி­களும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வ­தோடு கடலுக்கு நீராடச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும்  இடர் முகாமைத்துவ நிலையம்  அறிவித் துள்ளது. 
Powered by Blogger.