யாழில் இராமநாதன் கல்லூரி இருமாடிக் கட்டடம் திறந்து வைப்பு!

யாழ். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடிக் கட்டடத்தை வடமாகாணசபை உறுப்பினர் பாலகஜதீபன் திறந்து வைத்தார்.
கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடிக்கட்டடத் திறப்பு விழாவும் சிறுவர் முற்றத் திறப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை(27) முற்பகல் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.குறித்த நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Powered by Blogger.