கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்கள்!

23 வருடங்களுக்கு முன் இதேபோன்று ஒரு நாளில் கடற்கரும்புலிகளின் தாக்குதலினால் இலங்கை கடற்படையினரின் அதிவேக பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.


இந்த சம்பவம் தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடிக்க காரணமாக இருந்தது. இன்றுடன் 23 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கை கடற்படை தனது புதிய போர் கப்பலுக்கான ஆணையை வழங்கவுள்ளது.

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட 2ஆவது ஆழ்கடல் ரோந்து கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலுக்கு எஸ்.எல்.என்.எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவாவில் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர் கப்பல் அண்மையில் இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய போர் கப்பலுக்கான ஆணையை இலங்கை இன்று வழங்கவுள்ளது.

1995ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் ரணசுறு, சூரய ஆகிய அதிவேக பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் மூழ்கடித்திருந்தனர்.

இந்த தாக்குதல் தான், சந்திரிகா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் தவிர்ப்பு உடன்பாடு முடிவுக்கு வந்ததுடன், மூன்றாம் கட்ட ஈழப்போரும் வெடித்தது.

மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்த அதே நாளில் இலங்கை கடற்படை தனது புதிய போர்க்கப்பலுக்கான ஆணையை வழங்கவுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட 1 ஆவது ஆழ்கடல் ரோந்து கப்பல் கடந்த வருடம் ஜூலை மாதம் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்து கப்பலுக்கு பி-623 என்ற தொடர் இலக்கம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.