ஆடை தொழிற்சாலை முற்றாக எரிந்தது!

காலி, தங்பொதர பகுதியில் இன்று (10) அதிகாலை ஆடை தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இம்முறை புத்தாண்டை முன்னிட்டு விற்பனைக்காக ஆடைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் தீக்கறையான தொழிற்சாலை 5 கோடி பெறுமதியானது எனவும் காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி நகரஅ சபையின் தீ அணைக்கும் படையினர் மற்றும் இராணுவத்தின் தீ அணைக்கும் படையினர் முயற்சி செய்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தாலும் தொழிற்சாலை முற்றாக தீக்கறையாகி விட்டது.

எவ்வாறாயினும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
Powered by Blogger.