போதைப்பொருளுடன் இந்திய பெண்ணொருவர் கைது!

கஞ்சா வகையைச் சார்ந்த ஹாஷிஸ் போதைப்பொருளுடன் இந்திய பெண்ணொருவர் நேற்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், 
இந்தியா புது டெல்லியிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் நேற்று கஞ்சா வகையைச் சார்ந்த ஹாஷீஸ் போதைப்பொருளுடன் போதைத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பச்சை வலையமைப்பினூடாக சந்தேகத்திற்கிடமான வகையில் வெளியேற முற்படுகையிலேயே சுங்க பிரிவின் பரிசோதனை அதிகாரிகளால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். 
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்திய வேளையில் அவரின் கைப்பையிலிருந்து 8 கிலோ ஹாஷீஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் 
இச்சந்தர்ப்பத்தில்  இந்திய நிவ் டெல்லியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணெருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹாஷீஸ் இலங்கை பெறுமதி 3.5 மில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். 
இந்த ஹாஷீஸானது அரபி துருக்கி போன்ற நாடுகளில் புகைப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் உலர்த்தப்பட்ட சணல் செடியின் கொழுந்துகளாகும். அதனை இலங்கையில் இலத்திரனியல் புகைப்பிடைப்பு கருவியில் இட்டு பயன்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.